இங்கு கேள்வி மற்றும் பதில்கள் வெளியிடப்படுகிறது
இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களுடைய மேலான கருத்துக்களை தெரியபடுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
**************************************************************************
DEPARTMENTAL TEST FOR FOREST SUBORDINATE SERVICE OFFICERS
FOREST LAW - SECOND PAPER (With books)
தமிழ்நாடு வனச்சட்டம்1882 V வது ஆக்ட் பிரிவு 2 -ல் உள்ள பொருளின்படி இந்தச்சட்டத்தின் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
1) கருங்காலி (Block Wood)
2) நீக்கப்பட்டது
3) ஈட்டி (Rose Wood)
4) சந்தன மரம் (Sandal Wood)
5) நீக்கப்பட்டது
6) தேக்கு மரம் (Teak Wood)
இவையனைத்தும் பட்டியல் மரம் (பட்டியல் தடிமரம்) ஆகும்.
பிரிவு 56-E -ன்படி
1) அரசாங்கம் மரங்கள் எதனையும் அறிவிக்கை வாயிலாக பட்டியலில் சேர்த்திடவோ அல்லது நீக்கிடவோ செய்திடலாம்.
2) பட்டியலைப் பொருத்து இந்தச்சட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற அனைத்தும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப்பட்டியலில் அவ்வப்போது செய்யப்படுகின்ற திருத்தங்களுடனே பொருள் கொள்ளுதல் வேண்டும்.
ஆ) வன நிர்ணய அலுவலர் (Forest Settlement Officer)
வன நிர்ணய அலுவலர் என்பவர் 1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட் பிரிவு 4 (c) ன்படி நிர்ணயிக்கப்படுகிறார்.
எந்த நிலத்தையும் ஒரு ஒதுக்குக்காடாக அமைத்திட உத்தேசிக்கும்போது அரசாங்கம் அது சம்பந்தமாக அறிவிக்கையினை அரசிதழிலும் மாவட்ட அரசிதழிலும் வெளியிடவேண்டும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் மீதோ அல்லது அங்கு கிடைக்கும் வன விளை பொருட்களின் மீதோ உரிமை கோரிடவோ அல்லது அந்த உரிமை தனக்கு இருப்பதாக எந்த மனிதரும் குறிப்பிடும்போது அந்த உரிமையின் அளவு (Extent) தன்மை (Nature) மற்றும் தொடர்ந்து விசாரித்து தீர்மானிக்க மற்றும் அது சம்மந்தமாக நடவடிக்கை இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டு விதிகளின்படி மேற்கொள்ளவும் ஒரு அதிகாரியை நியமித்திடவேண்டும். அவர் வன உரிமை தீர்ப்பு அதிகாரி (வன நிர்ணய அலுவலர்) என்று அழைக்கப்படுவார். அவர் சாதாரணமாக வன அதிகாரி அல்லாத வேறு அதிகாரியாக இருப்பார். பொதுவாக வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரியாக இருப்பர்.
இ) வனக்குற்றம்
1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட் பிரிவு 2-ல் உள்ள பொருள் விளக்கக் கூற்றின் படி இச்சட்டம் அல்லது இச்சட்டத்தின் கீழ் வனையப்பட்ட விதிகளின்படி தண்டிக்கப்படக் கூடிய எந்த ஒரு குற்றமும் வனக்குற்றம் ஆகும்.
இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களுடைய மேலான கருத்துக்களை தெரியபடுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
solaivanangal@gmail.com
**************************************************************************
Departmental Examinations - May 2010
FOREST LAW - SECOND PAPER (With books)
1. விதிகளுடன் மேற்கோள்காட்டி சிறு குறிப்பு வரைக.
அ) பட்டியல் மரம் என்பதன் விளக்கம்தமிழ்நாடு வனச்சட்டம்1882 V வது ஆக்ட் பிரிவு 2 -ல் உள்ள பொருளின்படி இந்தச்சட்டத்தின் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
1) கருங்காலி (Block Wood)
2) நீக்கப்பட்டது
3) ஈட்டி (Rose Wood)
4) சந்தன மரம் (Sandal Wood)
5) நீக்கப்பட்டது
6) தேக்கு மரம் (Teak Wood)
இவையனைத்தும் பட்டியல் மரம் (பட்டியல் தடிமரம்) ஆகும்.
பிரிவு 56-E -ன்படி
1) அரசாங்கம் மரங்கள் எதனையும் அறிவிக்கை வாயிலாக பட்டியலில் சேர்த்திடவோ அல்லது நீக்கிடவோ செய்திடலாம்.
2) பட்டியலைப் பொருத்து இந்தச்சட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற அனைத்தும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப்பட்டியலில் அவ்வப்போது செய்யப்படுகின்ற திருத்தங்களுடனே பொருள் கொள்ளுதல் வேண்டும்.
ஆ) வன நிர்ணய அலுவலர் (Forest Settlement Officer)
வன நிர்ணய அலுவலர் என்பவர் 1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட் பிரிவு 4 (c) ன்படி நிர்ணயிக்கப்படுகிறார்.
எந்த நிலத்தையும் ஒரு ஒதுக்குக்காடாக அமைத்திட உத்தேசிக்கும்போது அரசாங்கம் அது சம்பந்தமாக அறிவிக்கையினை அரசிதழிலும் மாவட்ட அரசிதழிலும் வெளியிடவேண்டும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் மீதோ அல்லது அங்கு கிடைக்கும் வன விளை பொருட்களின் மீதோ உரிமை கோரிடவோ அல்லது அந்த உரிமை தனக்கு இருப்பதாக எந்த மனிதரும் குறிப்பிடும்போது அந்த உரிமையின் அளவு (Extent) தன்மை (Nature) மற்றும் தொடர்ந்து விசாரித்து தீர்மானிக்க மற்றும் அது சம்மந்தமாக நடவடிக்கை இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டு விதிகளின்படி மேற்கொள்ளவும் ஒரு அதிகாரியை நியமித்திடவேண்டும். அவர் வன உரிமை தீர்ப்பு அதிகாரி (வன நிர்ணய அலுவலர்) என்று அழைக்கப்படுவார். அவர் சாதாரணமாக வன அதிகாரி அல்லாத வேறு அதிகாரியாக இருப்பார். பொதுவாக வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரியாக இருப்பர்.
இ) வனக்குற்றம்
1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட் பிரிவு 2-ல் உள்ள பொருள் விளக்கக் கூற்றின் படி இச்சட்டம் அல்லது இச்சட்டத்தின் கீழ் வனையப்பட்ட விதிகளின்படி தண்டிக்கப்படக் கூடிய எந்த ஒரு குற்றமும் வனக்குற்றம் ஆகும்.
No comments:
Post a Comment