பிரிவு 68 A
ஒதுக்குக்காடுகள் முதலியவற்றில் உள்ள நிலம் எதனில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் குடிபுகுந்த மனிதரை சுருக்கு முறையில் வெளியேற்றல்: (to Summary eviction)ஒதுக்குக்காடுகளில் உள்ள நிலம் அல்லது அரசாங்கத்தின் கைப்பொறுப்பில் உளடள நிலம் எதனிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் குடிபுகுந்த மனிதர் எவரையும் அந்த நிலம் அமைந்துள்ள பிரதேசத்தின் மீது அதிகார வரம்புடைய வனச்சரக அலுவலர் (Forest Range Officer) அந்தஸ்துக்கு குறையாத வனத்துறை அதிகாரி அல்லது வட்டாட்சியர் (Tahsildar) அந்தஸ்துக்கு குறையாத வருவாய்த்துறை அதிகாரியால் வகுத்துரைக்கப்படலாகும் விதத்தில் சுருக்கு (Summary) முறையில் வெளியேற்றப்படலாம். மேலும் அந்த நிலத்தின் மீது விளைவிக்கப்பட்ட பயிர் அல்லது வேறு உற்பத்திப்பொருள் பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவேண்டும். எழுப்பப்பட்ட கட்டிடம் அல்லது வேறு கட்டுமானம் எதுவும் அல்லது அதன்மீது சேமிக்கப்பட்ட (deposited) எதுவும் கூட பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தப்பிரிவின் கீழ் செய்யப்படுகின்ற பறிமுதலானது மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரியால் முடிவு செய்யப்படவேண்டும் மற்றும் அவ்விதம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள் எதுவும் வகுத்துரைக்கப்படலாகும் விதத்தில் சேமிக்கப்படுதல் வேண்டும்.
மேலும்
(a)எந்த மனிதருக்கும் வகுத்துரைக்கப்படலாகும் விதத்தில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டு மற்றும்
(b)அந்த அறிவிப்பினைத்தொடர்ந்து விளக்கவுரை எதுவும் (representation, if any) பெறப்பட்டு அது முறைப்படி கவனமாக மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரியால் ஆராயப்பட்டிருந்தால் (duly considered) ஒழிய
இந்தப்பிரிவின் கீழ் அந்த மனிதரை பாதிக்கின்ற விதத்தில், எதிராக வெளியேற்றுதல் அல்லது முடிவு செய்தல் (eviction or adjudication) உத்தரவு பிறப்பித்தல் கூடாது.
------------------------------------------------------------------------------------------
முன் அறிவிப்பு கொடுப்பதற்கான நோட்டீஸ் மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
PDF Format -ல் Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment