Dinamalar News
நாள். 31.03.2018
தமிழகத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதை இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பியது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் உள்ள வனஊழியர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப்பணியாளர்கள் எவ்வாறு தீயை அணைக்கிறார்கள் என்று பார்த்தால் வனப்பகுதியில் உள்ள இலை தழைகளைக்கொண்டுதான் தீயை அணைக்கிறார்கள் என தெரியவருகிறது. இன்னும் வனப்பணியாளர்களுக்கு தீயை அணைக்க பெரும்பாலான இடங்களில் தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. பணியாளர்கள் எவ்வாறு தீயை அணைப்பார்கள்? தமிழகம் பல துறைகளில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருந்தாலும் வனத்துறையில் தீயை அணைக்க எந்த தொழில்நுட்பமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீயினால் அரிய வகை மற்றும் பல ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் செடி கொடிகள் அழிந்துவிடுகின்றன. இதுமட்டுமின்றி பல உயிரினங்களும் இறந்துவிடுகின்றன. எனவே புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் மற்றும் தேவையான உபகரணங்கள் வாங்கி அவற்றை பயன்படுத்தவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment