தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் 24.12.2016 அன்று சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து வன அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
வன அலுவலர்களின் பல பிரச்சினைகளைப்பற்றி உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவுசெய்தனர். வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவி உயர்வு பற்றி பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். வனச்சரக அலுவலகங்களில் எழுத்தர் மற்றும் கணினி ஆப்ரேட்டர் போன்ற பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. உயர்அலுவலர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தணிக்கைக்கு வருவது தவிர்க்கப்படவேண்டும் என பலரும் குறிப்பிட்டனர். அனைத்து கோட்டங்களிலும் சங்க நிர்வாகிகளுடன் மாதாந்திர கூட்டம் நடத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. திட்டப்பணிகள் மற்றும் அதில் உள்ள சிரமங்களைப்பற்றியும் எடுத்துரைத்தனர்.
மதியம் நல்ல தரமான உணவு வழங்கப்பட்டது.
கூட்டம் இனிதே நன்றாக நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment