அம்மான் பச்சரிசி
Euphorbia hirta
Euphorbia hirta (sometimes called asthma-plant) is a pantropical weed, possibly native to India. It is a hairy herb that grows in open grasslands, roadsides and pathways. It is widely used as a medicinal herb.
This erect or prostrate annual herb can get up to 60 cm long with a solid, hairy stem that produces an abundant white latex. There are stipules present. The leaves are simple, elliptical, hairy (on both upper and lower surfaces but particularly on the veins on the lower leaf surface), with a finely dentate margin. Leaves occur in opposite pairs on the stem. The flowers are unisexual and found in axillary cymes at each leaf node. They lack petals and are generally on a stalk. The fruit is a capsules with three valves and produces tiny, oblong, four-sided red seeds. It has a white or brown taproot. -------------------------------------------------------------------------------------------------------
அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது.
அம்மான் பச்சரிசி சிறு செடி வகையைச் சார்ந்தது. தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் மற்றும் ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீ. வரை உயரமாக வளரும்.
அம்மான் பச்சரிசி இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும்.
அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடனும் காணப்படும். தாவரத்தில் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப் பாலாடை என்கிற பெயரும் உண்டு.
அம்மான் பச்சரிசி குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தை சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும்.
தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பசுமையான அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு கழுவி, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு 1 டம்ளர் பாலில் கலக்கி, தினமும் காலை, மாலை இருவேளைகள் பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க வேண்டும்.
விந்து ஒழுகுதல் கட்டுப்பட அம்மான் பச்சரிசி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் இலைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 1 டம்ளர் எருமைத் தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.
அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள் மருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும்.
ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத் தூண்டும். இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக்குணம் கொண்டவை.
அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து, தினமும் பகல் சாதத்துடன் சேர்த்து ஏழுநாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணும், வாய்ப் புண்ணும் ஆறும்.
அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டுவந்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து சிறுநெல்லிக்காய் அளவு எடுத்து ஒருடம்ளர் அளவு மோரில் கலந்து காலையில் மட்டும் உள்ளுக்குக் கொடுத்து விடவேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு நின்றுவிடும்.(இந்த மூன்று நாட்களும் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும் மேலும் காபி, தேநீர் சாப்பிடக்கூடாது).
அம்மான் பச்சரிசிக் கீரையுடன் கீழா நெல்லி இலையையும் சம அளவுசேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இருவேளை என்று தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால், தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் சரியாகும்.
வயதானவர்களுக்கு இரவில் இருமல் ஏற்படும். இதனால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இதைக் குணப்படுத்த அம்மான் பச்சரிசியிலையைக் கசக்கிச் சாறு பிழிந்து வடிகட்டி நான்கு தேக்கரண்டியளவு சாறு எடுத்து, தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஓயாத இருமல் ஜலதோஷம் குணமாகும்.

No comments:
Post a Comment