பொதுக்குழு 10.09.17

                                      பொதுக்குழுக்கூட்டம் 10.09.2017

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் 10.09.2017 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு வன உயர்பயிற்சியக வளாகம், கோயம்புத்தூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

      குறிப்பாக அனைவரும் வனக்காப்பாளர்களின் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைப்பற்றி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பத்தாண்டுகளாக வனக்காப்பாளராகவே பணிசெய்வதாகவும் கடந்த மூன்றாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர். பதவி உயர்வு வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

      ஆண்டுதோறும் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்களுக்கான ஊதியமுரண்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.








No comments:

Post a Comment