முருங்கை மரம் (Drumstick tree)



Drumstick tree (முருங்கை மரம்)

Moringa oleifera
DrumstickFlower.jpg
Scientific classification e
Kingdom:     Plantae
Clade:          Angiosperms
Clade:          Eudicots
Clade:          Rosids
Order:          Brassicales
Family:         Moringaceae
Genus:         Moringa
Species:      M. oleifera
Binomial name
Moringa oleifera

Moringa oleifera is the most widely cultivated species of the genus Moringa, which is the only genus in the family Moringaceae. English common names include: moringa, drumstick tree (from the appearance of the long, slender, triangular seed-pods), horseradish tree (from the taste of the roots, which resembles horseradish), ben oil tree, or benzoil tree (from the oil which is derived from the seeds). It is a fast-growing, drought-resistant tree, native to the southern foothills of the Himalayas in northwestern India, and widely cultivated in tropical and subtropical areas where its young seed pods and leaves are used as vegetables. It can also be used for water purification and hand washing, and is sometimes used in herbal medicine.


Moringa oleifera

Scientific classification

Kingdom:     Plantae
Clade:          Angiosperms
Clade:          Eudicots
Clade:          Rosids
Order:          Brassicales
Family:         Moringaceae
Genus:         Moringa
Species:      M. oleifera
Binomial name
Moringa oleifera

                    ********************************* 


முருங்கைக்கீரையில் பொரியல் செய்வது எப்படி என்பதைப்பற்றியும் இங்கே காணலாம். எவ்வாறெல்லாம் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என சொன்னால் அதனை முயற்சி செய்வீர்கள் என்ற எண்ணத்தில் எனக்கு தெரிந்ததை இங்கு கூறுகிறேன், முயற்சி செய்து உடல் வளத்தை பேணுங்கள்

முருங்கைக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

1. முருங்கைக்கீரை - 1 கப்
2. முருங்கைப் பூ - கால் கப் (கிடைத்தால் போடவும்)
3. உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
4. காய்ந்த மிளகாய் - 3
5. பூண்டு - 5 பல்
6. வேர்க்கடலை -  தேவையான அளவு (2 கைப்பிடியளவு)
7. பொட்டுக்கடலை - தேவையான அளவு (1 கைப்பிடியளவு)

செய்முறை

காய்ந்த மிளகாய், பூண்டு, பொட்டுக்கடலை, வறுத்துத்தோல் நீக்கிய வேர்க்கடலை இவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். முருங்கைக் கீரை, முருங்கைப் பூ இரண்டையும் தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளுங்கள். வாணலியை (இருந்தால் மண் சட்டியை) அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, உப்பு சேர்த்து வதக்கி, வேகவையுங்கள். கீரையிலுள்ள நீரே போதும். தேவையெனில் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். தண்ணீர் வற்றி, கீரை வெந்ததும் அரைத்துவைத்திருக்கும் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் மணக்கும் முருங்கைக் கீரை பொரியல் தயார்.

                                *********************************
                                    **************************
                                          ******************



முருங்கை

முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் "muringa" என்ற பெயர் , "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.
முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக் கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்களிடையே முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நீர் சுத்திகரிப்பு மற்றும் இதன் நஞ்சு எதிர்ப்பு பண்புகள் மற்றும் பழங்காலத்தில் இருந்து முருங்கை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

இதன் கீரை (இலைகள்) மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. முருங்கைக்காய்களை ரசமாகவோ அல்லது சாறு வடிவத்தில் வழக்கமாக உட்கொள்வதால், முகப்பரு மற்றும் பிற தொடர்புடைய தோல் பிரச்சினைகள் குறைக்கிறது.

முருங்கை கீரை
முருங்கை கீரை தாதுவிருத்திக்கு அதிகம் பயன்படும் இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். இரத்த உற்பத்தியை பெருக்கக்கூடியது.

முருங்கைக்கீரையை உலர்த்தி பொடி செய்து வயிற்று வலி மற்றும் பேதியின்போது ஒரு ஸ்பூன் வாயிலிட்டு நீர் அருந்துவதால் குணம் அடையும்.

முருங்கைப் பூவை பாலிலிட்டுச் காய்ச்சி அருந்துவதால் ஆண்மை மிகும் , இதை வெறும் எண்ணெய் , நெய்யில் வதக்கி துவையலாகச் செய்தும் உண்ணலாம்.

முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, இஞ்சி சாறுடன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் மறைந்து வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பசி தோன்றும்.

 முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே  வராது.

சர்க்கரை நோயாளிகளுக்கு  முருங்கையைப் போன்ற மாமருந்து  இந்த உலகில்  வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள்  இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப்  பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு  பல மடங்கு அதிகரிக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக  வைட்டமின் சி கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள்  அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்

 முருங்கையின் பூ,பட்டை,வேர்,இலை,காய்,பிஞ்சு,பிசின் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

முருங்கை இலை:

            வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை- இது பழமொழி.முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.


                 *************************





No comments:

Post a Comment