ஒப்புவிப்பு விடுப்பு (Surrender Leave)

ஒப்புவிப்பு விடுப்பு (Surrender Leave)

1) ஊதியமில்லா விடுப்பு, சொந்த காரணங்களுக்கான ஈட்டாவிடுப்பு மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம் போன்றவை தவிர பிற காலங்களில் பணம் பெறும் பொருட்டு ஈட்டிய விடுப்பை ஊழியர் ஒருவர் ஒப்புவிப்பு செய்யலாம்.
(G.O Ms.No 1089, P&A.R dated 01.11.1980)

2) 24 மாத இடைவெளியில் 30 நாள்வரையும் 12 மாத இடைவெளியில் 15 நாள் வரையும் (அதற்கு குறைவாகவும்) ஈட்டிய விடுப்பை ஒப்புவிக்கலாம்.

3) விடுப்பை ஒப்படைக்கும் நாளுக்கு முன்னரோ அல்லது பின்னரோ விண்ணப்பம் கொடுக்கலாம். பின்னர் கொடுக்கப்படும் விண்ணப்பம் விடுப்பு ஒப்படைக்கும் நாளுக்கு ஒரு மாதத்திற்குள் இருக்கவேண்டும். விடுப்பு ஊதியத்துடன் மலைவாழ்படி, நகர ஈட்டுப்படி மற்றும் வாடகைப்படியும் கிடைக்கும். 1/30 என்ற வீதத்தில் விடுப்பு ஊதியம் இருக்கும். (அரசு ஆணை எண் 200 நிதி நாள் 01.04.1981) (G.O.Ms.No 43, Fin dated 16.07.1982) இக்காலத்திற்கு மருத்துவப்படி கிடைக்காது (அரசு க.எண் 107557 படிகள்/89-2 நிர்வாகத்துறை, நாள் 08.01.1991) இடைக்கால நிவாரணம் கிடைக்காது.(அரசு கடித எண் 28968/PC/94 நிதி நாள் 03.05.1994)

4)அரசுக்குச் சொந்தமான குடியிருப்பில், வாடகையுடன் இருப்பவருக்கும் வீட்டு வாடகைப்படி வழங்கலாம். ஆனால் வாடகையில்லா குடியிருப்பில் இருப்பவருக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது. (G.O. Ms No. 200 Fin. dt: 01.04.1981 (G.O. Ms.No777, Fin dated 07.09.1983 and Govt Lr.No.33853/II/84-1, Fin, dated 18.08.1984)

5) தற்காலிகப்பணி நீக்கத்தில் இருப்பவர், அக்காலம் பணிக்காலமாக கருதப்பட்டு மீண்டும் பணி ஏற்றால், தற்காலிக பணி நீக்க காலத்திற்கு அவருக்கு திரண்டுள்ள ஒப்புவிப்பு விடுப்பை பெற தகுதி உண்டு. இதற்கான விண்ணப்பத்தை தற்காலிகப் பணிநீக்கம் முடிந்து மீண்டும் பணி ஏற்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் தரவேண்டும். (Govt Lr. 38745/82-1, P&A.R dated 29.05.1982 and Govt Lr No 16261/83-1, P&A.R dated 18.04.1983)

6) தற்காலிகப் பணிநீக்க காலம் சொந்த காரணங்களால் ஈட்டா விடுப்பாகவோ அல்லது ஊதியமில்லா விடுப்பாகவோ கருதப்பட்டால் இந்தச்சலுகை கிடைக்காது. (Govt Lr.No92550/82-3, P&A.R, dated18/01/1983)

7) இந்த சரண் விடுப்பு உரிமை தற்காலிகமாக 28.11.2001 முதல் 19.10.2004 வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. (அ.ஆ.எண்.211 ப.நி.சீ.துறை (எப்.ஆர் III) நாள்.28.11.2001 மற்றும் அரசு ஆணை எண் 138 (ப.நி.சீ.துறை) நாள்.22.11.2002


8) இந்தச்சலுகை பின்னர் பகுதியாக திரும்ப வழங்கப்பட்டு, ஆண்டுக்கு ஏழு நாட்கள் வீதம் வழக்கமான வருடாந்திர சுழற்சியில் ஒப்படைப்பு செய்து ஊதியம் மற்றும் படிகள் 20.10.2004 முதல் பெறலாம் என்று ஆணையிடப்பட்டது. (அ.ஆ.எண்351 (பநிசீது) நாள்21.01.2004


9) 08.02.2006 முதல் 15 நாட்கள் சரண் விடுப்பு வருடாந்திர சுழற்சி முறையில் ஒப்படைப்பு செய்து விடுப்பு ஊதியம் பெறலாம். (அ.ஆ.எண். 19 ப(ம)நிசீ துறை FR III நாள் 23.02.2006

10) 14.08.2006 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் சரண்விடுப்பு வருடாந்திர சுழற்சி முறையில் ஒப்படைப்பு செய்து விடுப்பு ஊதியம் பெறலாம். (அ.ஆ.எண் 123 ப(ம)நிசீ துறை (FR III)நாள்.14.08.2006




No comments:

Post a Comment