செம்மரம் (Redsandal)

செம்மரம் (Redsandal) - Pterocarpus santalinus

 செஞ்சந்தனம் என அழைக்கப்படும் செம்மரமானது
1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட்
அட்டவணையில் காணப்படும் பட்டியல் தடிமரங்கள்
(Schedule Timber) வரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. எனவே இம்மரத்தை வெட்டுவதற்கு வனத்துறையின் அனுமதி பெறவேண்டும்.
இது தொடர்பான அரசு ஆணைகள் காண்பதற்கு
 கிளிக் செய்யவும்
 


செஞ்சந்தனம் (Pterocarpus santalinus; ஆங்கிலம்:Red Sandalwood;  எனப்படுவது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு தாவர இனமாகும். இது தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுவந்துள்ளது. இது தென்னிந்தியாவில் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மாத்திரமே காணப்படுகிறது. அத்துடன் இலங்கை, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் செஞ்சந்தனம் வளர்கிறது.

இது நன்கு ஒளி தேவைப்படக்கூடியதான, 8 மீ உயரம் வரை வளரும் சிறிய தாவரம் இனமாகும். இதன் தண்டு 50-150 செமீ விட்டம் வரை தடிக்கக்கூடியது. கன்றாக இருக்கும் போது விரைவாக வளரும் இது, பசளை குறைந்த மண்ணிலாயினும் மூன்றாண்டுகள் ஆகும் போதே 5 மீ உயரத்தை எட்டிவிடும். செஞ்சந்தன மரங்கள் பனியைத் தாங்குவதில்லை. வெப்பநிலை -1 °C இலும் குறைவடையும் போது இது செத்துவிடுவதுண்டு. எதிரடுக்குகளாகவும் மும்மூன்று இலைகளாகவும் காணப்படும் இதன் இலைகள் 3-9 செமீ வரை வளரக்கூடியன. செஞ்சந்தனப் பூக்கள் சிறு சிறு கொத்துக்களாகவே தோன்றும். இதன் பழங்கள் 6-9 செமீ நீளமான சிரட்டைகளுள் ஒன்று அல்லது இரண்டு விதைகளைக் கொண்டிருக்கும்.


                                            பயன்பாடு
செஞ்சந்தனக் கட்டைகள் வரலாற்றுக் காலம் முழுவதும் சீனாவில் மிக மதிப்புள்ளவையாக இருந்துள்ளன. சீன மொழியில் சித்தான் என அழைக்கப்படும் இது மிங் மற்றும் கிங் அரச மரபுகளின் ஆட்சிக் காலங்களில் பெரிதும் மதிக்கப்பட்டது. அக்காலத்தில் சீனாவில் செய்யப்பட்ட செஞ்சந்தனத் தளவாடங்கள் மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கப்பட்டன. செஞ்சந்தனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மிகவும் மதிப்புமிக்க மரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. செஞ்சந்தனத்தின் விளைச்சல் குறைவும் அரியதாயிருப்பதும் காரணமாக, இதனாற் செய்யப்பட்ட தளவாடங்களைக் காண்பது மிகக் கடினம் என்பது மாத்திரமன்றி, அவ்வாறானவை மிகப் பெறுமதி கூடியவையாகவும் உள்ளன. 17 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் இத்தாவரம் மிகவும் அருகிவிட்டிருந்தமை காரணமாக, செஞ்சந்தனத்தாற் செய்யப்பட்ட தளவாடங்கள் கிங் அரச மரபின் பேரரசு இல்லங்களுக்கு மாத்திரமே சொந்தமாகக் கொள்ளத் தக்கவாறு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

செஞ்சந்தனம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மிக உன்னதமான ஒன்றாகும். இதனாற் பெறப்படும் எண்ணெய் நறுமணம் மிக்கதும் பயன் மிக்கதும் ஆகும். செஞ்சந்தன எண்ணெய் மருந்துக்காக மாத்திரமன்றி அத்தர் வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது

                                            காப்புநிலை
கட்டைகளுக்காக செஞ்சந்தன மரங்கள் கூடுதலாக வெட்டப்படுவதால் அவை அருகிவருகின்ற காரணத்தால் இது ஐயுசிஎன் பட்டியலில் அருகிவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

                                          தரம் பிரித்தல்
செஞ்சந்தன மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 750 மீ உயரமாகவுள்ள கரிய களிமண் நிலத்திலேயே நன்றாக வளர்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஓரளவு உலர்ந்த காலநிலையே தேவைப்படுகிறது. செஞ்சந்தனக் கட்டைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அலை அலையான வடிவங்கள் காணப்படும். கூடுதலான அலைவடிவங்களைக் கொண்ட செஞ்சந்தனக் கட்டைகள் "அ" தரத்தை உடையதாக மதிப்பிடப்படுகின்றன. செஞ்சந்தனக் கட்டைகளின் அலைவடிவங்கள் கூடும்போது அவற்றின் தரமும் மதிப்பும் மிகக் கூடுதலாகும்.

                                   Redsandal (Pterocarpus santalinus)


Pterocarpus santalinus, with the common names red sanders, red sandalwood, and saunderswood, is a species of Pterocarpus endemic to the southern Eastern Ghats mountain range of South India. This tree is valued for the rich red color of its wood. The wood is not aromatic. The tree is not to be confused with the aromatic Santalum sandalwood trees that grow natively in South India.


                                         Description

Pterocarpus santalinus is a light-demanding small tree, growing to 8 metres (26 ft) tall with a trunk 50–150 cm diameter. It is fast-growing when young, reaching 5 metres (16 ft) tall in three years, even on degraded soils. It is not frost tolerant, being killed by temperatures of −1 °C.

The leaves are alternate, 3–9 cm long, trifoliate with three leaflets.

The flowers are produced in short racemes. The fruit is a pod 6–9 cm long containing one or two seeds

                                   Medicinal values

Pterocarpus santalinus is used in traditional herbal medicine as an antipyretic, anti-inflammatory, anthelmintic, tonic, hemorrhage, dysentery, aphrodisiac, anti-hyperglycaemic and diaphoretic.

                                  Grading of red sandalwood

Red sandalwood grown on the shale subsoils, at altitudes around 750 metres (2,460 ft), and in semi-arid climatic conditions gives a distinctive wavy grain margin. Lumber pieces with the wavy grain margin are graded as "A" grade. Red sandalwood with wavy grain margins sells at higher prices than the standard wood.

                                       Conservation status


Pterocarpus santalinus is listed as an Endangered species by the IUCN, because of overexploitation for its timber in South India. It is also listed in the appendix II of the CITES, which means that a certificate is required in order to export it, that should only be granted if the trade is not detrimental to the survival of the species.

No comments:

Post a Comment