கறிவேப்பிலை - Curry leaves - Curry tree
(Murraya koenigii)
கறிவேப்பிலை அல்லது கறிவேம்பு (curry leaf) என்று அழைக்கப்படும் இந்த தாவரமானது பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுகளில் சுவைகூட்டும் பொருளாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) ஆகும். இந்த மரத்தின் இலை, பட்டை மற்றும் வேர் என அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்வதால் பல மருத்துவ நலன்களை பெறமுடியும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.
பொதுவாக பலரும் உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில்போட்டுவிடுகிறோம். அதன் மருத்துவகுணம் தெரிந்ததால் தான் நம் முன்னோர்கள் உணவில் அதனை சேர்த்துள்ளனர். இனிவரும் காலங்களில் நாம் அதனை உணவில் இருந்து எடுக்காமல் உண்ணமுயற்சிப்போம்.
கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல் கொத்து கொத்தாகவே காணப்படும். ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும் இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ இல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறிப்பில்லை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது.
மருத்துவ குணம்
சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
The leaves are valued as seasoning in southern and west-coast Indian cooking, and Sri Lankan cooking, usually fried along with the chopped onion in the first stage of the preparation. They are also available dried, though the aroma is largely inferior.
The leaves of Murraya koenigii are also used as an herb in Ayurvedic medicine in which they are believed to possess anti-diabetic properties, but there is no high-quality scientific evidence for such effects.
1. இரத்த சோகையைக் குணப்படுத்துவதற்கு கறிவேப்பிலை பயன்படுகிறது கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தும் போலிக் அமிலமும் (Folic Acid) உள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.
2. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:
கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மருந்தாக இருக்க முடியும்.
3. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு:
புதிய கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகள் குறைகிறது
4. தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை, ஆலிவ் ஆயில் மற்றும் வெந்தயம்
கறிவேப்பிலையில் உள்ள பீட்டா – கரோட்டின், புரோட்டீன்கள் தலைமுடி உதிர்வது மற்றும் வழுவிலுப்பதை குறைக்கிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் தலைமுடியின் அடிப்பகுதியை வலிமைபடுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
கறிவேப்பிலையில் உள்ள ஆண்டி – ஆக்ஸிடெண்ட் பொடுகுத் தொல்லையில் இடுந்து விடுவித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
வெந்தயத்தில் உள்ள வைட்டமின் – பி நரைமுடி வராமல் தடுப்பதோடு தலைமுடியின் அடிப்பகுதியை சரிசெய்யும். இதனால் முடி உதிராமல் தடுக்கும். வெந்தயத்தில் உள்ள லிசித்தின் தலைமுடிக்கு பளபளப்பை தரும்.
முதலில் தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் வெந்தயத்தை சேர்த்து கொதிக்க விட வேண்டும். சிறிது நேரம் கழித்து ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி கறிவேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின்பு இதை பயன்படுத்தலாம்.
மேலே தயாரிக்கப்பட்ட எண்ணெயை தினசரி பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியில் வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். நரைமுடி, பொடுகு, மற்றும் முடிகளில் ஏற்படும் வெடிப்பை சரி செய்யலாம்.
5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது:
புற்று நோய்க்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகளில் முக்கியமானவை கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை (ஆங்கிலத்தில் கீமோதெரபி – Chemotherapy) ஆகும். இத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். ஆனால் கறிவேப்பிலையை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால் வேதிச்சிக்கிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை எளிதில் குறைத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்று நோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நாம் உண்ணும் உணவில் தேவையில்லை என்று நாம் தூக்கி எறியும் கறிவேப்பிலையில் நிறைந்துள்ள நன்மைகளை அறிந்து உணவில் சேர்த்து அதன் பன்களை முழுமையாக அடைய வாழ்த்துக்கள்.
கறிவேப்பிலையைச் சுவையுங்கள் நோயிலிருந்து விடுபடுங்கள்.

No comments:
Post a Comment