வனத்துறை சீருடைபணியாளர் தொடர்பான செய்திகள்

பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்
வனத்துறையில் பலர் பதவி உயர்வுக்காக ஆசைப்பட்டு போலி சான்றிதழ் கொடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கவேண்டியது மட்டுமின்றி இதனால் நியாயமாக பதவி உயர்வு கிடைக்கவேண்டிய பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அரசு இதி்ல் சிறப்புக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
போலி சான்றிதழ் தொடர்பாக ஒருவர் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் பலர் இதேபோல் இருக்கலாம் என்று தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியில் வனக்காப்பாளர்கள்
வனத்துறையில் வனக்காப்பாளர் நிலையிலிருந்து வனவராக பதவி உயர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பணிநிறைவு செய்திருக்கவேண்டும் என அரசாணையில் கூறப்படுகிறது. வனக்காப்பாளர் என்பவர் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வனக்காப்பாளராக பணிபுரிந்து வரும் பலருக்கும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.





இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதன் தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனால் பதவி உயர்வு மட்டும் இன்னும் வரவில்லை என மன வருத்தத்தில் வனக்காப்பாளர்கள் உள்ளனர். வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக  பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. ஏற்கனவே வனத்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளது. வனக்காப்பாளர் என்ற பதவிக்கு 2010 - 11 க்கு பிறகு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. வனக்காவலர் நிலையில் உள்ளவர்களுக்கு வனக்காப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வனக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. வனத்துறையில் பாதுகாப்பு பணியின் முதுகெலும்பு எனப்படும் பதவியானது வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் என அனைவரும் கூறும் நிலையில் இப்பதவிகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக வன அலுவலர் சங்கத்தின் பல கூட்டங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது வனக்காப்பாளர் நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது. எனவே வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இயற்கையை பாதுகாக்கவேண்டும் என பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் இக்காலகட்டத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்யவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே வனக்காப்பாளர்களின் நிலைகுறித்த கவிதை பணியாளர்கள் மத்தியில் பகிரப்பட்டது. எனினும் இன்னும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது



                                               **********************










No comments:

Post a Comment