வனப்பகுதிக்குள் கால்நடை மேய்ச்சல்
வனப்பகுதிக்குள் கால்நடை மேய்ச்சல் தொடர்பாக கிடைத்துள்ள கடிதங்கள் மற்றும் அரசாணைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் கடிதங்களோ அல்லது அரசாணைகளோ இருந்தால் அதனை தெரியபடுத்தவும். மேலும் இவைகளின் இன்றைய நிலை குறித்த விபரங்களுக்கு உரிய அலுவலரை ஆலோசித்துக்கொள்ளவும். ஆனால் எந்தவாெரு இடத்திலும் கால்நடைகளை வனப்பகுதிக்குள் அனுமதியின்றி மேய்க்கலாம் என குறிப்பிடவி்ல்லை. ஆனால் அனுமதி பெற்று கால்நடைகளை மேய்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவேண்டும் எனவும், அதிலும் விதிமுறைகளை கையாளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு இடத்திலும் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி தேவையில்லை என குறிப்பிடப்படவில்லை. அனுமதியின்றி யாரும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என சட்டப்பிரிவுகள் கூறுகின்றன.
தமிழ்நாடு வனச்சட்டம் பிரிவு 21 (d)இல்
அத்துமீறுகின்ற அல்லது கால்நடை மேய்ச்சல் செய்கிற அல்லது கால்நடையை அத்துமீற அனுமதிக்கின்ற
என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீறுபவர்களுக்கு
சிறைதண்டனை ஆறுமாதங்கள் வரையும் அல்லது 500 ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படலாம்
என உள்ளது. எனவே எவர் ஒருவரும் வனத்துறையின் அனுமதியின்றி காப்புக்காட்டிற்குள் செல்லக்கூடாது என்பது தெளிவாகிறது.
1. அரசு செயலாளர் அவர்களின் Letter No 28827/FR/89-21 நாள்: 31.07.1991
இதில் கால்நடைகளுக்கான கட்டணம் தொடர்பாகவும் அது திருத்தியமைக்கப்பட்டது தொடர்பாகவும் (உரிமையாளருக்கு உரிமம் வழங்க கட்டணம், செம்மறி ஆடுகளுக்கான கட்டணம், பசுமாடுகளுக்கான கட்டணம்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் கடிதத்தை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
2. அரசு செயலாளர் அவர்களின் அரசாணை (நிலை)எண் 47 நாள் 03.03.2000
G.O Ms. No 47 Dt : 03.03.2000
மாண்புமிகு தமிழக முதல்வர் 23.02.2000 நாளன்று மதுரையில் வெளியிட்ட அறிவிப்பையடுத்து ஆடுகளுக்கு மட்டும் காப்பு வனப்பகுதிகளில் மேய்ச்சல் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்களித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.
அரசாணை நகல் காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
3. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்களின்
ந.க.எண் 14032 / 2000 / உ நாள் : 06.03.2000
அரசாணை எண் 47 ன்படி ஆடுகளுக்கான மேய்ச்சல் கட்டணம் விலக்களிக்கப்பட்டதை அனைத்து மாவட்ட வனஅலுவலர்கள் மற்றும் கோட்ட வன அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
கடித நகல் காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
4. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்களின்
Ref No : E1 / 51015 / 2004 நாள் 07.10.2004வனப்பகுதிகளுக்குள் ஆடுகளை மே்ய்க்க உரிமம் வழங்குவது தொடர்பாக
( Local Sheep, Carrying capacity, Regeneration area)) ஒருசில குறிப்புரைகளை வழங்கி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடித நகல் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
எந்தவொரு இடத்திலும் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி தேவையில்லை என குறிப்பிடப்படவில்லை. அனுமதியின்றி யாரும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என சட்டப்பிரிவுகள் கூறுகின்றன.
தமிழ்நாடு வனச்சட்டம் பிரிவு 21 (d)இல்
அத்துமீறுகின்ற அல்லது கால்நடை மேய்ச்சல் செய்கிற அல்லது கால்நடையை அத்துமீற அனுமதிக்கின்ற
என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீறுபவர்களுக்கு
சிறைதண்டனை ஆறுமாதங்கள் வரையும் அல்லது 500 ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படலாம்
என உள்ளது.
வனப்பகுதிகளில் பல ஆண்டுகளாக மரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தினை மேம்படுத்தவும் நீர்நிலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வனப்பகுதிகள் மட்டும் அல்லாது தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள், கல்வி நிலையங்கள் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் என்னும் பணியானது பல கட்டங்களாக அதாவது தமிழ்நாடு காடுவளர்ப்புத்திட்டம், மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம், தேசிய காடுவளர்ப்புத்திட்டம், இடைபடுகாடுகள் திட்டம், சமூக காடுகள் வளர்ப்புத்திட்டம், பண்ணைக்காடுகள் திட்டம், நபார்டு திட்டம், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், தனியார் நிலங்களில் மரம்வளர்ப்புத்திட்டம், வனப்பகுதிகளில் விதைகள் நடும் திட்டம் என பல்வேறு திட்டங்களின் மூலம் பல கோடி செலவில் மரங்கள் நடும் திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தியதன் மூலம் வனப்பரப்பு 33 சதவீதம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இதுவரை தமிழகம் 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதத்தை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மேலும் தற்போது வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சல் என்பது தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் பெரும்பாலான இடங்களில் மேற்கூறிய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வனத்தில் மற்றும் வனத்தை நம்பிவாழும் பூர்வீக குடிகளுக்காக ஒரு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனால் ஒதுக்குக்காடுகளாக அறிவிக்கை செய்யாமல் இருந்த பல வனப்பகுதிகள் தற்போது ஒதுக்குக்காடுகளாக அறிவிக்கை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதிலும் பல இடர்பாடுகள் உள்ளது என்பது தனிக்கதை. மேலும் பல பகுதிகள் சரணாலயங்களாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் மக்களின் நலனுக்காகவே செய்யப்படுகிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். இயற்கையை நம்பித்தான் மனிதன் வாழ்கிறான். எங்கெல்லாம் இயற்கையை நாம் அழித்தோமோ அங்கெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் மனிதன் அழிவை சந்திக்க நேரிடுகிறது. எனவே இயற்கையை சார்ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு வரவேண்டும்.
No comments:
Post a Comment