Aloe vera என அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை (மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை) சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்குமடல் கொண்ட செடி வகையாகும். கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக்கொண்டிருக்கும். பக்கக்கன்றின் மூலம் இதன் உற்பத்தியை பெருக்கும். இந்தத் தாவரம் மூலிகையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை கன்னி, தாழை, என்றும் அழைப்பர்.
இதன் இலை மற்றும் வேர் இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல் ஆகியவை மருத்துவத்தில் பயன்படுகிறது.
பயன்கள்
தோல் நீக்கிய சோற்றை ஏழுமுறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாக சமைத்து உண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.
கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின் சாறு பயன்படுகிறது.
இதன் ஜெல்லினை தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, கற்றாழைச்சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,ஒரு கரண்டியளவு சாப்பிட்டு நிவாரணம் பெறமுடியும்.
கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை நன்றாக கழுவி உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.
கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும்.
இலை மஞ்சள் நிறத்திரவமும் தேனும் கலந்து உண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றும். ஜெல்லைப்பதப்படுத்தி குளிர்பானமாக பயன்படுத்தலாம்.
தாம்பத்திய உறவுக்கு கை கொடுக்கும் கற்றாழை
சோற்றுக் கற்றாழை வேர்களைவெட்டி, சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி இட்லிப்பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால்ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்துவைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பாலில் கலந்துசாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்து இந்த கற்றாழையாகும்.
இளமை ஊஞ்சலாட
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறைகழுவி சுத்தம் செய்து,
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்1றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
கோடை கால பிரச்சினைகளுக்கு .
கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்க்கடுப்பு, நீர்த்தாரைஎரிச்சல், உடல் வெப்பம் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து சுத்தமானநீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை,மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல்உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது,கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டைவைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும்.
பாத எரிச்சல் மற்றும் பாதவெடிப்பு நீங்க சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் எரிச்சலாக இருக்கும்.இதைப்போக்க இரவு படுக்கப்போகும் முன்னர் கற்றாழையின் சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாதவெடிப்புகளும் குணமாகும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள்காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறைபயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment