வனப்பணியாளர்களுக்கு ஒதுக்கீடு கிடைக்குமா

தற்போது தமிழ்நாடு வனத்துறையில் வனவர் - Forester (300 No;s), வனக்காப்பாளர் Forest Guard (726 No's), ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் Forest Guard with Driving License (152 No's) என மூன்று பதவிகளுக்கு (Total 1178) நேரடி நியமனம் மூலம் (தமிழ்நாடு வனச்சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம்)ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது வனப்பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பல ஆண்டுகளாக தேர்வு செய்யாமல் இருந்ததால் 40 சதவீதப்பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அவர்களுடைய தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் பல கூட்டங்களில் கூறிவந்தது.


 
இட ஒதுக்கீட்டில் தற்போது துறையில் பணிபுரியும் வனச்சீருடைப்பணியாளர்களுக்கோ அல்லது வனத்துறையில் பணிபுரியும் / பணிபுரிந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கோ ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால் காவல்துறையில் நேரடி நியமனத்தில் காவல்துறையில் பணிபுரியும் தகுதியுடைய நபர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
(அரசாணை (நிலை) எண் 380 உள் (காவல்) துறை நாள் 19.04.2010)
ஒதுக்கீடு வேண்டும் என்று தமிழ்நாடு வனஅலுவலர்கள் சங்க கூட்டத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு உயர் அலுவலர்களுக்கும் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் உள்ளது போன்று ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த பலரும் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க ஆற்றல் மிக்கவர்கள் தேவை. ஆற்றல் மிக்கவர்களை வழிநடத்த அனுபவம் மிக்கவர்கள் அவசியம் என்பதையும் எண்ணவேண்டும். தற்போது பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் ஆற்றல் மிக்கவர்களும் அனுபவம் மிக்கவர்களும் சேர்ந்து துறையை பலப்படுத்தமுடியும்.

தற்பாேது பணியில் உள்ள பலரும் தேவையான கல்வித்தகுதி உடையவர்களே ஆவர். பலரும் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் தகுதியான பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல பணியிடங்கள் காலியாக இருந்தும் இரவு பகல் பாராமல், உற்றார் உறவினர்கள் மட்டுமின்றி தன்குடும்பத்தையும் தவிக்கவிட்டு பலரும் பணியில் உள்ளனர். அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும்பொருட்டு ஒதுக்கீடு செய்தால் நல்லது.
 

No comments:

Post a Comment