Free Medical Checkup (GO 132 E&F Dt 17.10.18)

 Free Medical Checkup (GO 132 E&F Dt 17.10.18)

தமிழ்நாடு அரசு வனத்துறையில் பணிபுரியும் 30 வயதைக்கடந்த சீருடைப்பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்து அதற்கான ஆணையினையும் (அரசு ஆணை 132 E&F நாள் 17.10.18) பிறப்பித்துள்ளது. இதன்படி அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆணையில் குறிப்பிட்டுள்ளவற்றிற்கு

(1. General Physical Examination, 
2. Hearing / Vision, 
3. Heamogram, 
4. Blood Sugar, 
5. Liver function Test, 
6. Kidney function Test, 
7. Electrolytes, 
8. Urine Test, 
9. X Rays Test, 
10. Ultra Sound Abdomen, 
11. ECG )

இலவசமாக ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்து கொள்ளலாம். வனத்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் 40 வயதைக்கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பணியாளர்கள் பலருக்கும் நன்மையளிக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசாணையினை காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்

 இது தொடர்பாக தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.ஆர்.முருகேசன் அவர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளார்.

 நன்றி அறிவிப்பு
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட நீண்ட கால கோரிக்கையை ஏற்று 30 வயதைக் கடந்த அனைத்து  வன சீருடை பணியாளர்களுக்கும் அரசு ஆணை 132 E&F நாள் 17.10.18 ன்படி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் உத்தரவில் குறிப்பிட்ட பத்து வகையான உடல் நல பாதிப்பிற்கு இலவசமாக உடல் பரிசோதனை செய்து கொள்ள ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களுக்கும் உயர் திரு அரசு முதன்மை செயலாளர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அவர்களுக்கும் நமது கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்த மரியாதைக்குரிய முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பில் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்.முருகேசன்
தலைவர் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம்  

No comments:

Post a Comment