தண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus)

தண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus)

தண்ணீர்விட்டான் கிழங்கு அல்லது சாத்தாவாரி (Asparagus racemosus) என்பது அஸ்பராகஸ் இனத் தாவரம். ஒன்று அல்லது இரண்டு மீட்டர் வளரும் இது சரளைக்கல், கற்கள் கொண்ட மணற்பாங்கான பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது.. இது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்
இது தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.
இது முட்கள் கொண்ட கொடி வகைத் தாவரமாகும். இதன் இலைகள் மெல்லியதாகவும் ஊசி போன்று சிறியதாகவும் இருக்கும்.


இது வெள்ளை நிறத்தில் வாசனை மிக்கப் பூக்களைக் கொண்டதாகவும்,
இதன் பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவையாகவும் இருக்கும். இது தன் வேர்களில் விரல் வடிவ வெண்ணிறத்திலான கிழங்குகளைக் கொண்டிருக்கும். இதில் தனக்கான நீரையும், உணவையும் சேமித்து வைத்திருக்கும். இந்த கிழங்கானது பலவகையில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  
தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்
1. தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.

3. தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

4. தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

5. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
6. அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை.

7. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.

8. ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

9. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
10. கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

11. தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.

காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.
Asparagus racemosus
Asparagus racemosus (satavar, shatavari, or shatamull) is a species of asparagus. It is common and available throughout Nepal, Sri Lanka, India and the Himalayas.

It grows 1–2 m (3 ft 3 in–6 ft 7 in) tall and prefers to take root in gravelly, rocky soils high up in piedmont plains, at 1,300–1,400 m (4,300–4,600 ft) elevation. It was botanically described in 1799. Because of its multiple uses, the demand for Asparagus racemosus is constantly on the rise. Because of destructive harvesting, combined with habitat destruction, and deforestation, the plant is now considered "endangered" in its natural habitat.

Shatavari has small pine-needle-like phylloclades (photosynthetic branches) that are uniform and shiny green. In July, it produces minute, white flowers on short, spiky stems, and in September it fruits, producing blackish-purple, globular berries.

It has an adventitious root system with tuberous roots that measure about one metre in length, tapering at both ends, with roughly a hundred on each plant.

Uses
Shatavari is important in traditional Ayurvedic medicine. Extracts made from dried roots are used for various reproductive and hormonal issues in women. It is also used to promote milk production in nursing mothers, and for gastric ulcers and indigestion.

No comments:

Post a Comment