வனத்துறை வழக்குகள் தீர்வு காண்பது
தமிழ்நாடு வனத்துறையில் வனக்குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் வழக்குகள் இணக்கக்கட்டணம் விதித்து முடிவுக்கு கொண்டுவரப்படும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
இணக்கக்கட்டணம் என்பது குற்ற எதிரி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கு தண்டனையாக ஒரு கட்டணத்தை கட்டுவதாக ஒப்புக்கொண்டால் அதிகாரம் பெற்ற வனத்துறை அலுவலர் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு குற்றத்தின் தன்மைக்கேற்ப அந்த குற்றத்திற்கு நஷ்ட ஈடாக ஒரு தொகையை பெற்று அதனை அரசுக்கணக்கில் செலுத்துவது ஆகும். இந்த நடைமுறையில் அக்குற்றமானது முடிவுக்கு வரும்.
அனைத்து வழக்குகளும் இணக்கக்கட்டணம் விதித்து முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஒருசில வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு காணப்படவேண்டும் என சட்டம் உள்ளது.
ஒரு சில காரணங்களால் வனத்துறையில் ஒருசில வழக்குகள் நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக்கூடும். அதுபோன்ற வழக்குகளை அலுவலர்களின் ஆலோசனை மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு வழக்கை திரும்பப்பெற்று (வாபஸ்) முடித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதற்கான மாதிரிப்படிவம்
Modal Format for withdrawal ..............................................................
PROFORMA FOR WITHDRAWAL
1. Name of the Forest Office :
2. Offence Report Number and
Section of Law :
3. Name and Address of the
Accused :
4. C.C.Number and Name of the
Court :
5. Reason for withdrawal of Case :
6. Remarks of the Forest Range Officer :
7. Remarks of the D.F.O :
8. Opinion of the A.P.P :
.....................................................................................................................................................
சட்டத்தின் கூறுகளை காண்போம்
1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட்
பிரிவு 21. ஒதுக்குக்காடுகளில் அத்துமீறி நுழைதல் அல்லது சேதம் விளைவித்தல் மற்றும் அக்காடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள செயல்களுக்கான தண்டனைகள்
(a) சட்டப்பிரிவு 7 இல் தடைசெய்யப்பட்டுள்ள புதிய காடழிப்பு செய்கிற அல்லது
(b) ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் ஒதுக்குக்காட்டுக்கு தீ வைத்தல் அல்லது எரிகின்ற தீயை மேலும் தூண்டிவிடுதல் அல்லது எரிந்து கொண்டிருக்கும் தீயை அப்படியே விட்டுச்செல்லுதல் அல்லது
(c) மாவட்ட வனஅதிகாரி அவ்வப்போது அறிவிக்கை செய்கின்ற விதத்திலும் பருவ காலங்களிலும் தவிர தீ எதையும் தூ்ண்டிவிடுகிற, எரிய வைத்திருக்கின்ற அல்லது எடுத்துச்செல்கின்ற
(d) அத்துமீறுகின்ற அல்லது கால்நடை மேய்ச்சல் செய்கிற அல்லது கால்நடையை அத்துமீற அனுமதிக்கின்ற
(e) மரத்தை கீழே விழ வைக்கிற, மரத்தை சுற்றியுள்ள பட்டையை நீக்குகிற, குறியீடு செய்கின்ற, கிளை அல்லது கொம்புகளை வெட்டுகிற, சாறு எடுக்கின்ற, வேரோடு பெயர்க்கச்செய்கின்ற, அல்லது எரிக்கின்ற அல்லது பட்டையை உரிக்கின்ற அல்லது இலைகளை பறிக்கிற அல்லது வேறு வகையில் சேதம் விளைவிக்கின்ற
(f) கல்லை வெட்டி எடுக்கின்ற, சுண்ணாம்பு அல்லது மரக்கரியை சுடுகின்ற, எந்தவகை உற்பத்தி செயல்முறைக்குத் தேவையான ஆதாரப்பொருட்களை சேகரிக்கிற அல்லது வனப்பொருட்களை அகற்றுகின்ற
(g) விவசாய நோக்கத்திற்காகவோ அல்லது வேறெந்த நோக்கத்திற்காகவோ எந்த நிலத்தையும் சுத்தம் செய்கிற, பண்படுத்துகிற, பகுதி பகுதியாக பிரிக்கின்ற
(h) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு மாறாக வேட்டையாடுகிற, சுடுகின்ற, மீன்பிடிக்கின்ற, நீரில் விஷமிடுகின்ற அல்லது பொறிகள் அல்லது கண்ணி வைக்கிற
(i) அகழி (வடிகால்), வரப்பு (கரை), புதர்வேலி அல்லது கம்பிவேலி எதனையும் சேதப்படுத்துகிற, மாற்றுகிற அல்லது அகற்றுகிற
(எந்த மனிதரையும் அவர் காட்டுக்கு ஏற்படுத்தியுள்ள சேதத்திற்கு அவர் செலுத்த வேண்டுமென தண்டனை தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் உத்தரவிடும் இழப்பீட்டுடன்)
(1) அவர், பட்டியலில் உள்ள தடிமரம் சம்பந்தமாக மேற்சொன்ன எந்த செயல்களையாவது செய்திருந்தால் (ஐந்து வருடங்களுக்குக் குறையாத சிறை தண்டனை மற்றும் ரூபாய் இருபதாயிரம்) வரை அபராதமும் விதிக்கப்படுதல் வேண்டும், மேலும்
(a) முதல் குற்றத்திற்காக மேற்சொன்ன சிறை தண்டனையின் கால அளவு இரண்டு வருடங்களுக்கு குறையாமலும் மேற்சொன்ன அபராதமானது ரூபாய் ஏழாயிரத்து ஐநூறுக்கு குறையாமலும்
(b) இரண்டாவது அல்லது அதற்கு மேலான குற்றத்திற்கு மேற்சொன்ன சிறை தண்டனையின் கால அளவு மூன்று வருடங்களுக்கு குறையாமலும் மேற்சொன்ன அபராதமானது ரூபாய் பதினைந்தாயிரத்திற்கு குறையாமலும்
(2) வேறு எந்த வகை செயல்களுக்கும் சிறைதண்டனை ஆறுமாதங்கள் வரையும் அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இந்தப்பிரிவில் அடங்கியுள்ள தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள செயல்கள்
(a) அரசாங்கத்தால் செய்யப்பட்ட விதிகளுக்கேற்ப அல்லது மாவட்ட வன அதிகாரியின் எழுத்து மூலமான அனுமதியுடன் அல்லது அந்த அதிகாரியின் அதிகாரம் பெற்ற ஒரு அதிகாரியின் மேற்சொன்ன அனுமதியுடன் செய்யப்பட்ட எந்த செயலும் அல்லது
(b) சட்டப்பிரிவு 12 ன்கீழ் தொடர்பயன்பாட்டில் இருக்கின்ற அல்லது சட்டப்பிரிவு 18 ல் விவரிக்கப்பட்டுள்ள முறையில் ஒப்பந்தத்தால் அல்லது கொடையால் உருவாக்கப்பட்டுள்ள, எந்த உரிமையும்
இந்த பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டதாக கருதமுடியாது.
ஆனால் மாவட்ட வனஅதிகாரியால் உத்தரவிடலாகும் அந்த வன வேலைகளில் இந்த சட்டப்பிரிவு குறுக்கிடுவதாக முடிவு செய்தலாகாது.
பிரிவு 55. குற்றங்களை சமரசம் செய்து கொள்வதன் மூலம் முடித்துக்கொள்வதற்கான அதிகாரம்.
(1) சட்டப்பிரிவு 50 அல்லது 52 ன்கீழ் விவரிக்கப்பட்ட குற்றம் ஒன்றைத்தவிர வேறு வனக்குற்றம் எதுவும் எந்த ஒரு மனிதரால் செய்யப்பட்டிருப்பதாக, நியாயமாக, சந்தேகம் கொள்ளும்போது அந்த மனிதரிடமிருந்து அந்தக் குற்றத்திற்கு நஷ்ட ஈடாக ஒரு தொகையை சிறப்பு அதிகாரம் வழங்கப்பெற்ற எந்த வன அதிகாரியும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கைப்பற்றுதல் செய்யப்பட்டு பறிமுதலுக்கு உள்ளாகக்கூடிய சொத்தாக இருக்கின்றபோதிலும் அந்த சொத்து அந்த அதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீட்டு தொகையினை செலுத்தப்படும்போது அந்த சொத்தினை விடுவிக்கலாம்.
(2) மேற்சொல்லப்பட்ட நஷ்ட ஈடான தொகை அல்லது மேற்சொல்லப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட தொகை அல்லது இரண்டு தொகையும் சேர்த்து செலுத்தப்படும்போது பாதுகாவலில் உள்ள குற்றம் சுமத்தப்பட்டவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்திடவேண்டும், கைப்பற்றுதல் செய்யப்பட்டுள்ள சொத்தையும் விடுவித்திடவேண்டும், மேலும் அந்த மனிதர் அல்லது சொத்துக்கெதிரான மேல்நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.
(3) (a) எந்த சந்தனமரம் சம்மந்தமான குற்றம் நிகழ்த்தப்பட்டதோ அந்த சந்தன மரத்தின் எடையானது நூறு கிலோ கிராமிற்கு அதிகமாக இருத்தல் மற்றும்
(b) எந்த பட்டியல் தடிமரம் சம்மந்தமாக குற்றம் நிகழ்த்தப்பட்டதோ அந்த பட்டியல் தடிமரத்தின் (சந்தன மரம் தவிர) மதிப்பானது பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டிருக்குமேயானால்.
அந்தக்குற்றங்களுக்கு உட்பிரிவுகள் (1) மற்றும் (2) பொருந்தாது.
1972 வன உயிரின பாதுகாப்புச்சட்டம்
பிரிவு 54. குற்றங்களை சமரசம் செய்ய அதிகாரம்
(1) மத்திய அரசானது அறிவிக்கையின் மூலம் வனவிலங்கு பேணுகை இயக்குநரையோ அல்லது வன உயிரின பேணுகையின் உதவி இயக்குநர் பதவிக்கு குறையாத வேறெந்த அதிகாரியையோ அல்லது மாநில் அரசாக இருந்தால் அதேபோல் தலைமை வன உயிரின பாதுகாவலரையோ துணை வனப்பேணுகை அதிகாரி பதவிக்கு குறையாத அலுவலரையோ இச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக எந்தவொரு சந்தேகத்திற்கு உட்படும் நபரிடமிருந்தும் அக்குற்றத்திற்கு சமரசமாக தீர்த்துக்கொள்ளும்படி குற்றம் சாட்டப்பட்டவர் செலுத்தும் தொகையினைப் பெற்றுக்கொள்ளலாம்.
(2) அவ்விதமாக இழப்பீட்டு தொகையானது மேற்படி அலுவலரிடம் செலுத்தப்பட்ட பின்னர் அந்த சந்தேகத்திற்குரிய நபர் காவலில் இருந்தால் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு மேலும் அந்த நபர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
(3) குற்றத்தை சமரசம் செய்யும் முயற்சியில் இருக்கும் எந்த அதிகாரியும் இச்சட்டத்தின் கீழ் அந்த குற்றவாளிக்கு வழங்கப்பட்ட உரிமம் அல்லது அனுமதி எதனையும் ரத்து செய்ய உத்தரவிடலாம். அல்லது அவருக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லையெனில் அவ்விதம் உரிமம் அல்லது அனுமதியை ரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியை அணுகலாம்.
4. உட்பிரிவு (1) ன் கீழ் சமாதானமாக பெறப்பட்ட அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையானது எந்த விதத்திலும் ரூபாய் இருபத்து ஐந்தாயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
வரம்புரையாக எந்தவொரு குற்றமும் பிரிவு 51 ன்கீழ் குறிப்பிடப்பட்ட குறைந்தபட்ச தண்டனைக்கு சமரசப்படுத்த இயலாது.
No comments:
Post a Comment