கண்ணீர் அஞ்சலி 😭
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மிகைப் பணியிட வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணிபுரியும் திரு.M.செல்வன், உடல்நலக்குறைவு (மாரடைப்பு) காரணமாக, இன்று (09.01.2019) காலை பில்லூர் டேம் அருகிலுள்ள கீழ்பில்லூர் என்ற பழங்குடியின செட்டில்மென்ட் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது இறுதி யாத்திரை நாளை அவரது கிராமத்தில் நடைபெறவுள்ளது. அவரது இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
திரு.நசீர் (உதவி வனப்பாதுகாவலர்) அவர்களின் இரங்கல் செய்தி
என்னிடம் பணியாற்றிய நல்ல மனிதர். மிகவும் வேதனையடை கிறேன். எனது ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறேன். 😭😭
வனத்துறையில் பணிபுரியும் பலரும் தங்களுடைய உடல்நலனில் அக்கரையோடு இருக்கவேண்டும். ஆனால் அவர்களால் அவ்வாறு உடல்நலத்தை பேணமுடியாமலும் முறையாக மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளமுடியாமலும் தன்னுடைய இன்னுயிரை இழக்கின்றனர். அவரைப்பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment