Forest School Annual Day

Forest School Annual Day 2019 

                       தமிழ்நாடு வனத்துறையில் திருப்பத்தூர் வனக்கோட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக இயங்கும் வனத்துறை பள்ளிகளான புதூர்நாடு மேல்நிலைப்பள்ளி, புதூர்நாடு துவக்கப்பள்ளி, நகரகுப்பம் நடுநிலைப்பள்ளி, பெரும்பள்ளி நடுநிலைப்பள்ளி, நெல்லிவாசல் உயர்நிலைப்பள்ளி, நெல்லிவாசல் துவக்கப்பள்ளி மற்றும் வசந்தாபுரம் ஆரம்பப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆண்டு விழா புதூர் நாடு வனத்துறை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 09.01.19 மற்றும் 10.01.19 ஆகிய தேதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


                   இவ்விழாவை திருப்பத்தூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் Dr.R முருகன் I.F.S  அவர்கள் தலைமை ஏற்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

                   இவ்விளையாட்டு போட்டிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மலைவாழ் பழங்குடியின் மாணவ மாணவியர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கபடி, கோகோ, கைப்பந்து, ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் போன்ற 15 க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகளும் ஆரம்பப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.
 
     இவ்விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் K.R. சோழராஜன், உடற்கல்வி இயக்குனர் திரு S.கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர் திரு S. சதீஸ்குமார் ஆகியோருடன் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் துணையுடன் சிறப்பாக நடத்தப்பட்டது. 
                
                    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்கள், வனத்துறை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் திருப்பத்தூர், ஆலங்காயம், ஆம்பூர் மற்றும் சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர்களால் வழங்கப்பட்டு, 09.01.19 மாலை விளையாட்டு போட்டிகள் இனிதே நிறைவுபெற்றது.

          
                 இதனைத்தொடர்ந்து 10.01.19 ம் தேதி காலை 10.00 மணியளவில் அனைத்து வனத்துறை பள்ளிகளுக்கான ஆண்டு விழாவில் மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் கலைத்திறமையை மேம்படுத்தும் வகையில் ஒயிலாட்டம், தப்பாட்டம், ஆதிவாசிகளின் நடனம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பள்ளி குழந்தைகள் பங்கேற்க சிறப்பாக நடத்தப்பட்டது. 


                      வனத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் பல்வேறு சாதனைகள் குறித்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்களால் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கு  மாவட்ட வன அலுவலர் Dr.R முருகன் I.F.S அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அனைத்து வனச்சரக வனப்பணியாளர்கள், திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலக அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

              விழா முடிவில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் K.R. சோழராஜன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. 

No comments:

Post a Comment