கோவை வனக்கோட்டம்

கோவை வனக்கோட்டம்
கோவை வனக் கோட்டத்தில் மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வன உயிரின வழக்கில் ஒரு தீர்ப்பு.
--------------
தந்தத்துக்காக யானையை வேட்டையாட முயற்சித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி மேட்டுபாளையம் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகம், ஓடந்துறை காப்புக் காடு பகுதியில்
A1.சென்ராயன் த/பெ.மணி தும்மங்குண்டு வருசநாடு.
A2.சிவா,தபெ உதயசூரியன். வருசநாடு.
A3.குபேந்திரன்
த/பெ பாலுதேவர், வருசநாடு.
A4.சிங்கம் த/பெ பிச்சயகுட்டி வருசநாடு ஆகிய நான்கு பேர் கடந்த 20.12.2011 அன்று தந்தத்துக்காக ஒரு ஆண் யானையினை வேட்டையாட முயன்றுள்ளனர்.



இது தொடர்பாக சிறுமுகை வனச்சரக அலுவலரால்
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு WLOR.No.10/2011
(CC NO.35/13) பதிவு செய்யபட்டு சிறையில் நான்கு பேரையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கண்ட வழக்கில் இன்று (12.3.19) மேட்டுபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எதிரிகள் 4 பேர்களுக்கு காட்டுயானையை வேட்டையாட முயன்ற குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும்
1.தழிழ்நாடு வனச்சட்டம் படி 6 மாத சிறை ரு.500 அபாராதமும் 2.வனஉயிரின பாதுகாப்புசட்டத்தின் படி     மூன்று வருட சிறை தண்டணை மற்றும் 10,000 ரூபாய் அபாராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாட்சப் வாழ்த்துக்கள்
திரு.நசீர் உ.வ.பா (பணி நிறைவு)
வணக்கம்.
 வாழ்க வளமுடன்.

இவ்வழக்கின் தீர்ப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.

 இதன் தொடக்கத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

 தற்போதைய தலைமை வனப் பாதுகாவலர் திரு. ஐ. அன்வர்தீன் ஐ எஃப் எஸ்  அவர்கள் கோவை மாவட்ட வன அலுவலர் ஆக இருந்தபோது இத்தகைய குற்றவாளிகள் குறித்து விரிவான விளக்கமளித்து,  உடனடியாக இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். பின்னர் அதன் தொடர்ச்சியாக மாவட்ட வன அலுவலர் ஆக வந்த திரு. வி. திருநாவுக்கரசு ஐ எஃப் எஸ்  அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஸ்பெஷல் டீம் ஏற்பாடு செய்து திரு. பார்த்திபன் வனச்சரக அலுவலர் ஆக இந்த போது,
 திரு. சி  தினேஷ் குமார் வனச்சரக அலுவலர் இருவரும் சேர்ந்து வரச நாடு பகுதிகளிலும் அதையொட்டிய கேரள பகுதிகளுக்கும் சென்று, இத்தகைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு,

கோவை வனக் கோட்டம் கொண்டுவரப்பட்டு பின்னர் தற்போதைய தலைமை வனப் பாதுகாவலர,  கோவை மண்டலத்தில் வன பாதுகாவலர் ஆக இருந்தபோது அவரது குடியிருப்பில் குற்றவாளிகளை விசாரித்து விரிவான அறிக்கையை மாவட்ட வன அலுவலர் திரு வி திருநாவுக்கரசு ஐ எப் எஸ் அவர்கள் முன்னிலையில் அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் குற்றவாளிகளை       திரு. தினேஷ் வனச்சரக அலுவலகர் வசம் ஒப்படைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்ற காவலில் வைத்து,

பின்னர் குற்றப்பத்திரிக்கையை திரு.தினேஷ் குமார் வனச்சரக அலுவலர் மேட்டுப்பாளையம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தினார்.

 அவரது குற்றப்பத்திரிக்கை மிகவும் தெளிவாகவும், சட்டப்படியான நடவடிக்கைக்கு ஏற்றதாகவும் இருந்தபடியால் இவ்வழக்கின் தீர்க்கும் சாதகமாகவே அமைந்தது.

எனவே இவ்வழக்கிற்கு இவ்வழக்கின் தீர்ப்பிற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டியது திரு. ஐ. அன்வர்தீன் ஐ எப் எஸ் அவர்களையும்,  திரு.வி. திருநாவுக்கரசு, ஐ எப் எஸ் அவர்களையும் திரு தினேஷ்குமார் வனச்சரக அலுவலர் அவர்களையும்
,
இதற்கு உதவியாக இருந்த திரு பார்த்திபன் வனச்சரக அலுவலர் அவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

 உடன் பணியாற்றிய அனைத்து சீருடை பணியாளர் களையும் பாராட்டியே ஆக வேண்டும்.  மேலும் இவ்வழக்கினை நடத்துவதற்கு தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு சென்று வந்த சீருடை பணியாளர் களையும் மனதார பாராட்ட வேண்டும்.

 இதில் எங்களது பங்களிப்பு அவ்வப்போது இருந்தது என்றாலும், குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.

 அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளிகளின் மீது தொடர் நடவடிக்கை எடுத்த  அனைத்து சீருடைப் பணியாளர்கள்  கோவை மற்றும் நீலகிரி மாவட்ட வனப் பணியாளர்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி இவர்கள் மீது தொடர்ச்சியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாட்சப் வாழ்த்துக்கள்

Thiru.Kumaravel  Rtd 

வன உயிரின குற்றம் சாட்டப்பட்டவர்க்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முனைப்புடன் பணிசெய்து வழக்கினை வெற்றி வழக்காக்கி வனக் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தந்த அனைவருக்கும் நன்றிகள்

இது போன்று பலரும் வாழ்த்துக்களை திறம்பட நடத்தியவர்களுக்கு கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment