மே 1 தினமலர் நாளிதழில் உடும்பு வேட்டையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளது.
உடும்பு Varanus bengalensis (Large Bengal Monitor Lizard) என்ற இவ்வுயிரினமானது 1972 வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், அட்டவணை I Part II, வரிசை எண் 10 - ல் காணப்படுகிறது. எனவே இவற்றை வேட்டையாடுவது மற்றும் வேட்டையாட முயற்சி செய்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்
உடும்புகள் (Monitor lizard) பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புலால் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (Varanus bitatawa) , வரானசு மபிடாங் (Varanus mabitang) மற்றும் வரானசு ஒலிவாசியசு (Varanus olivaceus ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. இவை முட்டையிடல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் ஆகும். 7 முதல் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.

No comments:
Post a Comment