மயில்
மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்) Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் 'கண்' போன்ற வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்து கொள்ளும்.
இந்திய மயில்
இந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் - Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும். தோகையானது உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்.
மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். ஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும். ஆண்பாற் பெயர் Peacock ஆகும். பெண்பாற் பெயர் Peahen ஆகும். மயிலின் சத்தம் மயில் அகவல் என அழைக்கப்படுகிறது.
1972 - ஆம் ஆண்டு வருட வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மயில் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 1 இல் காணப்படுகிறது. (Schedule I Part 3 பறவைகள் வரிசை எண் 11 Peafowl (Pavo cristatus - பாவோ கிரிஸ்டாட்டஸ்) )

அய்யா வணக்கம். ரயிலில் மோதி இறந்து போகும் மயிலை வனக் காப்பாளர் பிரேத பரிசோதனை செய்து புதைப்பதற்கு ஏதேனும் தொகை வழங்கப்படுமா ?
ReplyDelete