கரடி (Sloth bear) - Melursus ursinus

The sloth bear (Melursus ursinus) is a myrmecophagous bear species native to the Indian subcontinent. It feeds on fruits, ants and termites. It is listed as Vulnerable on the IUCN Red List, mainly because of habitat loss and degradation.

அசையாக்கரடி (Sloth bear) இந்திய துணைக்கண்டத்தில் வாழும் இரவிலே இரைதேடும் ஒரு வன உயிரினமாகும். இவற்றை வேட்டையாடுவது மற்றும் வேட்டையாட முயற்சிப்பது போன்றவை 1972 வன உயிரினப்பாதுகாப்புச்சட்டத்தின்படி தண்டனைக்குரியதாகும். அசையாக்கரடியானது மேற்படி சட்டம் அட்டவணை 2 (Schedule II) பகுதி 2 (Part II)  வரிசை எண் 5 (Serial Number 5) இல் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுயிரினமானது அரசால் பாதுகாக்கப்படும் ஒன்றாகும். எனவே இவற்றை வேட்டையாடுவது பிடியில் வைத்திருப்பது வேட்டையாட முயற்சிப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். 
கரடி (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு. இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும். ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. 

உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைகுறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. கரடிகள், வேட்டையாடவும் எதிரிகளைத்தாக்கவும் நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.

கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன.கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும்.குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் மிகக் கடுமையான குளிர்காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்திலேயே (Hibernation ) கழித்துவிடுகின்றன. துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை. அவ்வாறு உறங்கும் போது இவற்றின் உடலில் இருக்கும் சக்தி விரயமாகாமல் இருப்பதற்காக இவற்றின் இதயத் துடிப்பு மிகவும் குறைந்துவிடும். இவ்வாறு சுய நினைவு இல்லாமல் இருக்கும் நிலையில் இவை குட்டிகளை ஈனுகின்றன.துருவக் கரடிகள் ஒரு முறையில் ஒன்றிலிருந்து மூன்று குட்டிகள் ஈனும்.

கரடியில் பலவகைகள் காணப்படுகின்றன அவை
1. பனிக்கரடி
2. கொடுங்கரடி
3. அமெரிக்கக் கருங்கரடி
4. வெண்கண்வளையக் கரடி இரு கண்களைச்சுற்றியும் இருவெள்ளையான வளையம்  
   இருப்பதால் இதனை மூக்குகண்ணாடிக் கரடி என்றும் அழைப்பர்.
5. அசையாக்கரடி (சுலாத்துக் கரடி) (Sloth bear)
6. ஆசியக் கருங்கரடி
7. மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.

கரடிகள் இலை தழைகள் மற்றும் மாமிசம் போன்றவற்றையும் உண்ணும் அனைத்து உண்ணியாகும். பெரும்பாலும் பழங்கள், பழ வித்துக்கள், தண்டுகள், சில குறிப்பிட்ட இலைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை உண்ணுகின்றன. கரடிகள்,மனிதர்களைவிடவும் தாவரவியல் அறிவு மிகுந்தவை. எந்தப் பருவத்தில் எந்த வகைக் காய்கனிகள் எங்கே கிடைக்கும் என்பதைக் கரடிகள் நன்றாக அறிந்திருக்கின்றன. இவை, நாவற்பழத்தை மிகவும் விரும்பி உண்ணும். மரங்களின் உச்சிவரை எளிதில் ஏறும் திறன் கரடிக்கு உண்டு. கரடிகளுக்கு தேனையும் மிகவும் விரும்பி உண்ணும். மலைக் குகைகளிலும், மரங்களின் உச்சிகளிலும் உள்ள தேன் கூடுகளை தேனுக்காக கரடிகள் பெற்றுக்கொள்ளும். இது கரையானையும் விரும்பி உணவாகக் கொள்கின்றன. கரடிகள் கரையான் புற்றில் வாய் வைத்து மிகுந்த ஓசையுடன் கரையான்களை அப்படியே உறிஞ்சிவிடும் திறன் கொண்டவையாகும். கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும்.

அசையாக்கரடி (Sloth bear) இந்திய துணைக்கண்டத்தில் வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும். அதன் அசையாத்தன்மை காரணமாக எளிதில் வேட்டையாடப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் மரத்திலேயே இது வசிக்கும். இவை விட்டை போட மட்டுமே, வாரத்துக்கு ஒருமுறை மரத்தில் இருந்து தரையிறங்கும். அதுவும் குறிப்பிட்ட இடத்தில்தான் விட்டை போடும். “இரையுண்ணிகளால் வேட்டையாடப்படும் ஆபத்து இருந்தும் விட்டை போட மட்டும் தரையிறங்குவதன் காரணம் தெரியவில்லை. யாருக்கும் தெரியாத ஒரு புதிர் இது. ஒரு ஆண் அசையாக்கரடி ஒரேயொரு பெண் கரடியுடன் தான் உறவாடி இருக்கும் என்பர்.


No comments:

Post a Comment