தஞ்சாவூர் மண்டலம்

 தஞ்சாவூர் மண்டலம்

குயில் வேட்டை: சீர்காழியில் 3 பேர் கைது, 14 குயில்கள் மீட்பு

குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 14 குயில்களை வனத்துறையினர் மீட்டனர்.

இந்தியக் குயில் (Cuculus micropterus) (Family Cuculidae) எனும் பறவையானது 1972 வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் அட்டவணை IV வரிசை எண் 11 ல் (17 Cuckoos) காணப்படுகிறது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குயில் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து வனச்சரக அலுவலர்  குமரேசன் தலைமையில் வனவர்கள் மற்றும் பணியாளர்கள் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை செய்ததில் திருக்களாச்சேரி பகுதியைச் சேர்ந்த ரகு, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தங்கையன், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்த 14 குயில்களையும் மீட்ட அதிகாரிகள் பின்னர் அவற்றை பறக்கவிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் இணக்கக்கட்டணம் (அபராதம்) விதிக்கப்பட்டது.


பின்னர் வனச்சரக அதிகாரிகள் பறவைகளை தனிநபர்கள் பிடித்து செல்வது சட்டப்படி குற்றமாகும். இதை யாரும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment