முகவரியில்லா புகார் கடிதங்கள் (மொட்டைக்கடிதங்கள்)

Anonymous/Pseudonymous Complaints 

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருசில நேரங்களில் பலவித புகார்களுக்கு உள்ளாகின்றனர். புகாரானது எழுத்து மூலம் பெறப்படும் அல்லது பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக உரிய அலுவலரை அணுகி புகார் அளிக்கலாம். அதன்மீது முறையான விசாரணை மேற்கொண்டு அதற்குத்தக்கவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் ஒருசில நேர்வுகளில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் புகார் அளிக்கும் சம்பவமும் நடைபெறுகிறது. மேலும் ஒருசிலர் தவறான முகவரி கொடுத்தும், முகவரி இல்லாமலும் (மொட்டைக்கடிதங்கள்) ஒரு அரசு ஊழியர் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீது புகார் மனுக்களை அவரது உயர் அலுவலருக்கோ அல்லது அரசுக்கோ அனுப்பிவிடும் சம்பவமும் நடைபெறுகிறது.

இதுபோன்று பெறப்படும் கடிதங்களின் மீது எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து வெளியாகியுள்ள கடிதங்கள் மற்றும் அரசாணைகளைப்பற்றி காண்போம்.

ஊழல் புகார் கூறும் மொட்டை கடிதம் மீது நடவடிக்கை கூடாது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு என நாளிதழில் வந்த செய்தி.


பெரும்பாலும் முகவரியில்லா அல்லது தவறான முகவரியில் இருந்து அனுப்பப்படும் புகார் மனுக்கள் பெரும்பாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அனுப்பப்படுகிறது. ஒருவரை பழிவாங்கவேண்டும் அல்லது அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கவேண்டும் என எண்ணும் நபர்கள் இதுபோன்ற புகார் மனுக்களை அனுப்பிவிடுகின்றனர். இதனால் அந்நபருக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஒழுங்காக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணமும் சிதறடிக்கப்படுகிறது.

தமிழக அரசு 03.03.1982 இல் அரசு ஊழியர்களின் மேல் குற்றம் சுமத்தி கையெழுத்திடாத மனுக்களோ அல்லது புனைப்பெயரில் மனுக்களோ வந்தால் எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து துறைத்தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission) Circular No: 03/03/16  நாள் 07.03.2016 இல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முகவரியில்லா மற்றும் தவறான முகவரியில் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகலை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்


அதேபோன்று தமிழக அரசும் 19.02.2018 இல் புகார் மனுக்கள் தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது (GO Ms No: 173 Dated 19.02.2018 Personnel and Administrative Reforms (N) Department) அதன் நகலை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் 24.09.2020 இல் முகவரியில்லாத புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை  (Central Vigilance Commission) Circular No: 12/09/20  நாள் 24.09.2020)  வெளியிட்டுள்ளது. அதில் முகவரியில்லாத புகார் கடிதங்கள் மீது நடவடிக்கை தேவையில்லை என தெரிவித்துள்ளது.அதன் நகலை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment