மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் 2021
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டக்கிளைகளின் நிர்வாகிகள் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு மாநில சங்க நிர்வாகிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர், ஈரோடு, காஞ்சிபுரம், முதுமலை கூடலூர், பொள்ளாச்சி, திருப்பத்தூர், திருச்சி, கொடைக்கானல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய 15 மாவட்ட கிளைச்சங்கத்திற்கான தேர்தல் 06.02.2021 சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக அரூர், விழுப்புரம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்ட கிளைச்சங்கத்திற்கான தேர்தல் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிந்தபிறகு மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment