தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் 06.02.2021 மற்றும் 07.02.2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 13.02.2021 ஆம் தேதி சனிக்கிழமை மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் திருச்சி அருண் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
தேர்தல் ஆணையாளர்களாக திரு.N.வெங்கடேசன், வனச்சரக அலுவலர், சேலம் மாவட்டக்கிளை, திரு.S.கார்த்திகேயன், வனவர், தருமபுரி மாவட்டக்கிளை, திரு.T.முத்துராசு, வனக்காப்பாளர், திருச்சி மாவட்டக்கிளை மற்றும் திரு.P.சத்தியமூர்த்தி, வனக்காவலர், நாமக்கல் மாவட்டக்கிளை ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்தல் அமைதியாக நடைபெற்றது.
இத்தேர்தலில் மாநிலத்தலைவர் பதவிக்கு வனச்சரக அலுவலர் நிலையிலும் மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு வனவர் நிலையிலும் பொருளாளர் பதவிக்கு அனைத்து நிலையிலிருந்தும் மாநில துணைத்தலைவர் பதவிக்கு வனக்காப்பாளர் நிலையிலும் மாநில இணைச்செயலாளர் பதவிக்கு வனக்காவலர் நிலையிலும் பிரதிநிதிகள் போட்டியிடவேண்டும் என்பதற்கிணங்க தேர்தல் நடத்தப்பட்டது.
மாநிலத்தலைவர் பதவிக்கு மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் திரு.K.சிவப்பிரகாசம் வனச்சரக அலுவலர் (கோயம்புத்தூர் மாவட்டக்கிளை) அவர்கள் மாநிலத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு மூன்று வேட்பாளர்கள் களமிறங்கினர். அதில் திரு.P.சுப்ரமணியன் வனவர் (திருச்சி மாவட்டக்கிளை) அவர்கள் மாநில பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநில பொருளாளர் பதவிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திரு.P.பிரபு வனக்காப்பாளர் (தருமபுரி மாவட்டக்கிளை) அவர்கள் மாநில பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநில துணைத்தலைவர் பதவிக்கு ஐந்து நபர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியதில் திரு.L.மகேஷ்குமார் வனக்காப்பாளர் (நீலகிரி மாவட்டக்கிளை) அவர்கள் மாநில துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநில இணை செயலாளர் பதவிக்கு இருவர் மட்டுமே வேட்பாளர்களாக களமிறங்கியதில் செல்வி.P.A.இராஜசெல்வி (வனக்காவலர்) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
இத்தேர்தலில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த மற்றும் சங்கப்பணிகளில் தீவிரமாக செயல்பட்ட திரு.K.சிவப்பிரகாசம் வனச்சரக அலுவலர் அவர்கள் மாநிலத்தலைவராகவும், 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்தவரும் வனப்பணியாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை அறிந்தவருமான திரு.P.சுப்ரமணியன் வனவர் அவர்கள் மாநில பொதுச்செயலாளராகவும், 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் கொண்டவரும் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை அறிந்தவரும், சங்கப்பணிகளில் ஈடுபாடு கொண்டவருமான திரு.L.மகேஷ்குமார் வனக்காப்பாளர் அவர்கள் மாநில துணைத்தலைவராகவும், தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வான திரு.P.பிரபு வனக்காப்பாளர் மாநில பொருளாளராகவும் செல்வி.P.A. இராஜசெல்வி வனக்காவலர் மாநில இணை செயலாளராகவும் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment