நாட்டுக்குரங்கு (Bonnet macaque)
Bonnet macaque என அழைக்கப்படும் நாட்டுக்குரங்கு 1972 இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட ஒரு வன உயிரினமாகும். இது Schedule II Part - 1, Sl No 3A - ல் காணப்படுகிறது. இதனை வேட்டையாடுவது துன்புறுத்துவது போன்றவை இச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் அறிவியல் பெயர் Macaca radiata ஆகும்.
இவை குல்லாய் குரங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு குரங்கு வகையாகும். இவ்வகையான குரங்குகள் ஓரிட வாழ்வியாக உள்ளது. இக்குரங்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் செம்முகக் குரங்குகள் இந்தியப் பெருங்கடல் பகுதி துவங்கி கோதாவரி நதி, தபதி ஆறு போன்ற வட இந்தியப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
குரங்கு (Monkey) ஒரு பாலூட்டி விலங்கு. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. இதில் மரத்தில் வாழும் வகைகளும் நிலத்தில் வாழும் வகைகளும் உண்டு. குரங்குகள் அதிகமாக பழத்தினை உண்ணும். அதுமட்டுமின்றி பூச்சிகள், சிலந்திகள், கொட்டைகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றையும் உண்ணும்.
குரங்குகள் மிகவும் பரவலான சைகைகள் மற்றும் நடத்தைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வகைகளும் தனித்துவமான முறையில் தங்களின் வகைகளிடம் மட்டும் பேசிக்கொள்ளும் (கூக்குரல் மற்றும் சைகைகள் ) தனித்தன்மையுடையது. இவை அதன் மேல் உதடுகளை பின்னால் இழுத்து, அதன் மேல் பற்களைக் காட்டும். சிறுத்தைகள் போன்ற கொடிய உயிரினங்களிடமிருந்து தப்புவதற்காக இவ்வாறு செய்கின்றன.
ஆண் குரங்கினங்கள் பொதுவாக பெண் குரங்குகளிடம் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன.
ஆண் குரங்குகள் பெரும்பாலும் தன் தகுதியை அதிகரிக்க போராடும். உயர்தர தகுதி பெற்ற ஆண் குரங்குகள் இனப்பெருக்கம் செய்யும் பொருட்டு, பெண்களினத்தை முதலில் அணுகுகின்றன. பெண் குரங்குகள் ஒரு வருடத்தில் ஒரு சில மாதங்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றுக்கொள்கின்றன, இதன் விளைவாக ஆண்களுக்கு இடையே போட்டி ஏற்படுகிறது.
No comments:
Post a Comment