வனத்துறையின் அனைத்து பணிகளையும் சீரும் சிறப்புமாக திறம்பட செய்பவர்கள் வனத்துறையில் உள்ள சீருடைப்பணியாளர்கள் என்பதை யாவரும் அறிவர். சீருடைப்பணியில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் உள்ளனர்.
வனத்துறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு சமீப காலங்களாக அதிவேகமாக மக்களிடம் பரவி வருகிறது. அதேவேளையில் வனப்பணியாளர்களின் நிலை மற்றும் அவர்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. அதாவது பல வருடங்களுக்கு முன்னர் வனஉயிரினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியில் வருவது அரிதான செயலாக இருந்தது. ஆனால் தற்போது வன உயிரினங்கள் தொடர்பான செய்தி ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் படிக்க முடிகிறது. அதாவது மனித வன உயிரின மோதல், வன உயிரினங்களால் பயிர்சேதம், வன உயிரின வேட்டை உள்ளிட்ட செயல்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதற்கு காரணம் பல உள்ளது.
நன்று
ReplyDelete