அனைவருக்கும் வணக்கம்
தற்போது வனத்துறையில் GPS Readings - இன் பயன்பாடு அதிகரித்துள்ளது. எந்தவொரு பணி செய்தாலும், ஏதாவது திட்டப்பணிகளை செய்தாலும் அந்த இடங்களின் GPS அளவீடுகளை தெரிவிக்கவேண்டும். GPS அளவீடுகளை எடுக்கவும். GPS அளவீடுகளுடன் கூடிய Photo எடுக்கவும் பல செயலிகளை (Applications it means App) நாம் நமது செல்போன் மூலம் பயன்படுத்துகிறோம். நம்மால் அளிக்கப்படும் GPS அளவீடுகள் கொண்டு ஒரு இடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப்பற்றி அறிய பல செயலிகள் (App) உள்ளது. அதில் ஒன்றைப்பற்றி தற்போது இங்கு காணலாம்.
தற்போது நாம் அனைவரும் Mobile Phone (Android) பயன்படுத்துகிறோம். Android Mobile Phone உதவி கொண்டு GPS அளவீடுகள் அடிப்படையில் ஒரு இடத்தை Internet and Signal கிடைக்காத இடத்திலும் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை என்னால் முடிந்த அளவு விளக்கமாக அளிக்கிறேன்.
1. முதலில் தங்களது Mobile Phone இல் Play Store சென்று GPS Waypoint Finder என்னும் செயலியை (App) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
2. பின்னர் அந்த செயலியை (App) Open செய்யவும்.
Mobile Phone - இல் Location ஆன் செய்து கொள்ளவும். மேலே உள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும். அதில் இடது பக்கம் Settings உள்ளது. அதில் Sound, Units, Location, Coordinates ஆகியவை இருக்கும். அதில் Coordinates தேர்வு செய்து தங்களிடம் உள்ள Readings க்கு தகுந்தவாறு Degrees, or Degrees Minutes or Deg Min Sec இதில் ஏதாவது ஒன்றை Select கொள்ளவும் . நமது துறையில் Degrees format இல் மட்டுமே பெரும்பாலான Readings (Eg N.12.123456, E 78.123456) இருக்கும். உங்களுக்கு தக்கவாறு Select செய்து கொள்ளவும்.
வலது பக்கம் Edit Option உள்ளது. அதில் Edit way Point, New Way Point, Import, Export, Delete ஆகியவை இருக்கும். இதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று New Way Point என்பதை தேர்வு செய்து பதிவு செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு தோன்றும்.
அதில் Name என்ற இடத்தில் Touch செய்து உரிய பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் Edit Latitude and Longitude என்ற இடத்தை Touch செய்து GPS அளவீடுகளை பதிவு செய்யவேண்டும். பின்னர் Done என்பதை Touch செய்தால் நீங்கள் சென்றடையவேண்டிய இடம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்றும் எந்த பக்கம் செல்லவேண்டும் என்பதையும் (Arrow Mark and Distance ) காணலாம்.
இரண்டாவது Edit Way Point இல் சென்றால் ஏற்கனவே உள்ள Reading ஐ Edit செய்து கொள்ளலாம்.
இதில் குறைந்தது 500 வரை பதிவுசெய்து கொள்ளலாம்.
என்னால் முடிந்த அளவு விரிவாக எடுத்துரைத்துள்ளேன் என நம்புகிறேன். தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தங்களுக்கு பயனுள்ளதாக இல்லைெயனில் பிறருக்கு பகிரவும்.
No comments:
Post a Comment