உலக சுற்றுச்சூழல் தினம்
உலக சுற்றுச்சூழல் தினம் (World Environmental Day, WED) ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் நாள் பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றவும் சுற்றுச்சூழல் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் ஏற்படுத்தவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொது சபையினால் 1972 ஆம் ஆண்டு மனித சூழலுக்கான ஐ.நா. மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான ஜூன் 5 ஆம் தேதியே உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும், கருப்பொருள் ஒன்று தேர்வு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
நோக்கம்
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த பல ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் உணரப்பட்டு வருகிறது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
சூழலியல் தொடர்பான செயல்களுக்கு மக்கள் தங்களுடைய நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விஷயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
உலக சுற்றுச்சூழல் தினம் இவ்வருடம் (2024) ஜூன் 5 ஆம் நாள் நாடு முழுவதும் Land restoration, desertification and drought resilience என்ற கருப்பொருளை மையமாக வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. வனத்துறையின் மூலம் சூழல் மேம்பாட்டு குழு கிராமங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் வனக்கோட்டம், அமிர்தி வனச்சரகத்தின் மூலம் சூழல் மேம்பாட்டு குழு கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம் சென்ற வருடம் (2023) ஜூன் 5 ஆம் நாள் நாடு முழுவதும் வனத்துறையின் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 13.05.2023 முதல் நடத்தப்பட்டது.
பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற தலைப்பின் கீழ் வீடியோ
காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.23 அமிர்தி சிறு உயிரியல் பூங்காவில் மாவட்ட வன அலுவலர் திரு.S.கலாநிதி I.F.S மற்றும் உதவி வனப்பாதுகாவலர் திரு.S.மணிவண்ணன் ஆகியோரது வழிகாட்டுதல்படி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்பட்டு கிராம முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திரு.K.K.வேலு அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்று நட்டுவைத்து விழாவிற்கு தலைமை தாங்கினார்.
1. மின் ஆற்றலை சேமிப்போம்
2. தண்ணீரை சேமிப்போம்
3. பிளாஸ்டிக் பை தவிர்த்து துணிப்பை பயன்படுத்துவோம்
4. நிலையான உணவு முறைக்கு மாறுவோம்
5. கழிவுகளை குறைப்போம்
6. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவோம்
7. மின் கழிவுகளை குறைப்போம்
வேலூர் வனக்கோட்டம், அமிர்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களான நீப்பளாம்பட்டு, பாளபிராயம்பட்டு, நெக்கினி, தொங்குமலை மற்றும் அமிர்தி சிறு உயிரியல் பூங்கா வளாகம் ஆகியவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் முதன்மை கொண்டாட்டத்திற்கான இடமாக இந்தியா தெரிவு செய்யப்பட்டது.
2000 The Environment Millennium – Time to Act
2001 Connect with the World Wide Web of Life
2002 Give Earth a Chance
2003 Water – Two Billion People are Dying for It!
2004 Wanted! Seas and Oceans – Dead or Alive?
2005 Green Cities – Plant for the Planet!
2006 Deserts and Desertification – Don't Desert Drylands!
2007 Melting Ice – a Hot Topic?
2008 Kick The Habit – Towards A Low Carbon Economy
2009 Your Planet Needs You – Unite to Combat Climate Change
2010 Many Species. One Planet. One Future
2011 Forests: Nature at your Service
2012 Green Economy: Does it include you?
2013 Think. Eat. Save. Reduce Your Footprint
2014 Raise your voice, not the sea level
2015 Seven Billion Dreams. One Planet. Consume with Care.
2016 Zero Tolerance for the Illegal Wildlife trade
2017 Connecting People to Nature – in the city and on the land, from the poles to the equator
2018 Beat Plastic Pollution
2019 Beat Air Pollution
2020 Time for Nature
2021 Ecosystem restoration
2022 Only One Earth
2023 Solutions to Plastic Pollution
2024 Land restoration, desertification and drought resilience
No comments:
Post a Comment