வேட்டைத்தடுப்பு காவலர் (APW) ஊதிய உயர்வு

வேட்டைத்தடுப்பு காவலர் ஊதிய உயர்வு

தமிழ்நாடு வனத்துறையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் (Anti Poaching Watcher) பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் முதன்மையான பணி வனப்பணியாளர்களுடன் இணைந்து வனப்பகுதியில் தங்கி ரோந்துப்பணி மேற்கொள்வது, மனித வன உயிரின மோதல் ஏற்படாவண்ணம் ஊருக்குள் வரும் வனஉயிரினங்களை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்புவது, வனப்பகுதியில் வேட்டைத்தடுப்பு பணிகளுக்கு உதவுவது மற்றும்  வனத்துறைக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து பல்வேறு பணிகளையும் மேற்கொள்கின்றனர். 

இப்பணிக்கு பெரும்பாலும் மலைவாழ்மக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஒருசில இடங்களில் மலைவாழ்மக்கள் அல்லாதோரும் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு வேட்டைத்தடுப்பு காவலர்களாக பணிபுரிபவர்கள் 10 ஆண்டுகள் கடந்த பின்னர் அரசு வழிகாட்டுதல்படி வனக்காவலர்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம் தற்போது Rs.12500/- என வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இந்த ஊதியத்தை Rs. 15625/- என மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. G.O. (Ms) No. 20 ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS (fr.2(I)) DEPARTMENT   Dt 03.01.2025. அதன்படி 01.01.2025 முதல் இந்த ஊதிய விகிதம் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையினை காண்பதற்கு 

No comments:

Post a Comment